சிந்திக்க.....!!!

எங்கள் நிலை


              எங்கள் நிலை
         
           எங்கள் வீதிகள் அகலமாகி வருகின்றன
ஆனால்
      எம் மனங்கள் குறுகிக் கொண்டே போகின்றன.


         எங்கள் வீடுகள் மிக அலங்காரமாக உள்ளன
ஆனால்
எங்கள் குடும்பங்கள் அலங்கோலமாய் அலைகின்றன.


         நாம் அதிகமாக செலவழிக்கின்றோம்
ஆனால்
செற்பத்தையே பெற்றுக் கொள்கின்றோம்

        அதிகமாகப் பண்டங்களை வாங்கிக் குவிக்கின்றோம்
ஆனால்
சொற்பமாகவே அவற்றை அனுபவிக்கின்றோம்.


         எங்களிடம் அதிகம் வசதிகள் இருக்கின்றன
ஆனால்
அவற்றை அனுபவிக்க நேரம் போதவில்லை.


         எங்கள் வருமானங்கள் உயர்ந்து வருகின்றன
ஆனால்
நம் ஒழுக்கமும் பண்பாடும் சரிந்து வருகின்றன.


         நாங்கள் பக்கம் பக்கமாக வாசிக்கின்றோம்
ஆனால்
சிறிதளவே கற்றுக் கொள்கின்றோம்.


         கல்விப் பட்டங்கள் பல பெற்றிருக்கின்றோம்
ஆனால்
நம் சிந்தனை மந்தமாகியிருக்கின்றது.


         எங்களிடம் நிபுணர்கள் நிறைய இருக்கின்றனர்
ஆனால்
பிரச்சனைகள் ஒருபோதும் தீர்ந்தபாடில்லை.


         எம்மிடம் மருந்துகள் விதவிதவிதமாய் இருக்கின்றன
ஆனால்
ஆரோக்கியம் எங்கும் அருகி வருகின்றது.


          நாங்கள் சொத்துக்களைப் பெருக்கிக் கொள்கின்றோம்
ஆனால்
நல்ல பெறுமானங்களை இழந்து வருகின்றோம்.


          நாங்கள் மற்றவர்களுடன் அதிகமாக உரையாடுகின்றோம்
ஆனால்
அரிதாகவே அடுத்தவர் மீது அன்பு வைக்கின்றோம்.


         எங்களிற்கு அறிமுகமானவர்கள் நிறைய இருக்கின்றனர்
ஆனால்
உண்மை நன்பர்கள் என்று எவரும் இல்லை.


         சந்திரனுக்கு பலமுறை போய் வந்து விட்டோம்
ஆனால்
அடுத்த வீட்டானைப் போய்ப் பார்பது சிரமமாகத் தெரிகின்றது.


         நாம் விண்வெளியையும் கைப்பற்றி விட்டோம்
ஆனால்
எம் உள்ளங்களை அடக்கியாளத் தெரியாதிருக்கின்றோம்.


          நாம் வளி மண்டலத்தைத் தூய்மைப்படுத்த முயல்கின்றோம்
ஆனால்
எங்கள் ஆத்மாக்களை மாசுபடுத்திக் கொள்கின்றோம்.


          நாங்கள் அதிகமாகத் திட்டமிடுகின்றோம்
ஆனால்
அற்பமாகவே சாதிக்கின்றோம்.


         நாம் உலக சமாதானத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுகின்றோம்
ஆனால்
எமக்குள்ளே சண்டைபிடித்துக் கொள்கின்றோம்.


         எங்கள் காட்சி அறைகளில் பண்டங்கள் நிறைய இருக்கின்றன
ஆனால்
களஞ்சிய சாலைகள் காலியாகவே உள்ளன.