முடியுமானால்!


முடியுமானால்

உன்னைச் சூழவுள்ளவர்கள் நிதானம் தவறிவிட்டு
அதற்கான பழியை உன்மீது 
சுமத்திட்ட போதிலும்
நிலைகுலையாது நிதானமாய்
நடந்திட உன்னால் முடியுமானால்…….


எல்லோரும் உன்னை சந்தேகிக்கும் போது
அவர்களது சந்தேகத்திற்கு இடமளித்து விட்டு
உன்மீது உனக்கு விசுவாசம் வைக்க
உன்னால் முடியுமானால்……


நெடுநேரம் காத்திருக்கவும்
அதனால் களைப்படையாதிருக்கவும்
உன்னால் முடியுமானால்……


உன்னைப் பற்றி பொய்யுரைக்கும் போது
நீ பொய்யுரைக்காதிருக்க முடியுமானால்……


மற்றோர் உன்னை வெறுக்கும் போது
உன் மனதில் வெறுப்புக்கு
இடமளிக்காதிருக்க முடியுமானால்……


அதிகம் நல்லவன் போல் காட்டிக் கொள்ளாமலும்
பேறறிஞன் போல் பேசாமலும் இருக்க 
உன்னால் முடியுமானால்……


உன்னால் கனவு காணவும்,
ஆனால் அக்கனவுகளை
உன் எஜமானராக்கிடாமலும்
இருக்க முடியுமானால்……..


உன்னால் சிந்திக்கவும் ஆனால்
அந்தச் சிந்தனைகளே
இலட்சியமெனக் கொள்ளாமலும்
இருக்க முடியுமானால்…….


பெருவெற்றியையும் படு தோல்வியையும்
நிதானமாய் எதிர்கொள்ளவும்
அந்த ஏமாற்று வித்தைகள் இரண்டயுமே
ஒரே விதமாய் மதித்திட
உன்னால் முடியுமானால்…….


உன் சாதனைகள் அனைத்தையும் ஒரே
குவியலாக்கி அவற்றை பணயம்
வைத்து இழந்திடவும் இழந்தபின்
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்கவும்
அந்த இழப்புப் பற்றி மூச்சுக் கூட
விடாமல் இருக்க உன்னால் முடியுமானால்…..


சாதாரண சனங்களோடு
உறவாடிப் பழகினாலும்
உன் நற்குணங்களை
இழந்திடாதிருக்க முடியுமானால்……..


அரசர்களோடு பவனி வந்தாலும்
உன் சாதாரண தன்மையை இழக்காதிருக்க
உன்னால் முடியுமானால்………


பகைவர்களோ பாசமிகு நண்பர்களோ
உன்னை நோவிப்பதற்கு
இடமளிக்காதிருக்க முடியுமானால்……..


எல்லோரும் மதித்துப் போற்றும்
அதே வேளையில எவரையும்
தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாதிருக்க
உன்னால் முடியுமானால் ……


பெறுமதி மிக்க ஒவ்வொரு நிமிடத்தையும்
பயன் மிக்க அறுபது வினாடிகளால்
நிரப்பிட உன்னால் முடியுமானால்…….


இந்த பூமியும் அதிலுள்ள அத்தனையும்
நிச்சயமாய் உனக்குரியவை தான் மகனே!
அன்றியும் நீ ஓர் உண்மை மனிதனாவாய் மகனே!!

     
          -ரட் யார்ட் கிப்லிங்-



கொஞ்சம் சிரியுங்கள்

கொஞ்சம் சிரியுங்கள்

உள்ளே இருப்பது


உள்ளே இருப்பது
                             
                     வருட முடிவில் ஒருவகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் தமது வகுப்பாசிரியருக்குப் பல பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கையளித்தனர். பூக்கடைக்காரரின் மகள் அழகான மலர்ச் செண்டொன்றைக் கொண்டுவந்து கொடுத்தாள். பேக்கரிச் சொந்தக்காரரின் மகள் பெரிய கேக் பெடடியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். வெளிநாட்டு மதுபானக் கடை முதலாளியின் மகன் பெரிய பெட்டியொன்றைக் கொண்டு வந்து ஆசிரியரின் கையில் ஒப்படைத்தான். அப்பெட்டியின் அடிப்பகுதியில் சிறிது திரவம் ஒழுகிக் கொண்டிருந்தது.

                             ஒழுகிய திரவத்தை விரலால் தொட்டுச் சுவைத்துப் பார்த்த ஆசிரியர் ”இதில் இருப்பது வைன் தானே?” என்று கேட்டார்

                              ”இல்லை” என்றான் சிறுவன்.

                               மீண்டும் ஒருமுறை விரலை நனைத்து அதனைச் சுவைத்துப் பார்த்த ஆசிரியர் ”ஓஹோ! இதனுள் இருப்பது பியர் தானே?” என்று கேட்டார்.

                              ”இல்லை” என்றான் சிறுவன்.

                         நான் தோற்றுவிட்டேன் இப்பெட்டிக்குள் இருப்பது என்னவென்று நீயே சொல்லிவிடேன்” என்றார் ஆசிரியர் கெஞ்சலாக.

                        ”ஒரு நாய்க்குட்டி” என்றான் சிறுவன்