ஒப்பந்தம்

    
            ஒப்பந்தம்

     உலக நாடுகள்
    ஒடி
    பல மேடைகள்
    ஏறி
    எல்லோரும்
    கூடி
    செய்து கொண்ட
    சமாதான ஒப்பந்தங்களை
    தேசம் வந்ததும்
    கிழித்தெறியும்
    நம்மவர் போல்

    என் தேகத்தின்
    அணுக்கள்
    கூடி
    உணர்வுகள் எங்கும்
    ஓடி
    இருதய வாசல்
    ஏறி
    செய்து கொண்ட
    மறக்கவேண்டும்
    ஒப்பந்தத்தை
    உன் கடைகண்
    வீச்சு
    சுக்குநூறாகி
    விடுகின்றது


கருத்துகள் இல்லை: