புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல்

      புதிய சாரதி  அனுமதிப்பத்திரம் பெறுதல்

அன்பிற்குரிய நன்பர்களே! சாரதி அனுமதிப் பத்திரம் பெற விரும்பும் உங்களிற்கு சாரதிப்பத்திரம் பெறுவதற்குரிய நடைமுறையினை கீளே படிமுறையாக விளக்கியுள்ளேன் இப்பதிவின் மூலம் உங்களிற்கு சிறிது உதவியிருந்தால் அதுவே என் சந்தோசம்.

  • புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவங்களையும் உரியவாறு நிரப்பி  மோட்டார் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • ஆவணங்கள் அலுவலகரால் பரிசோதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சாரதி அனுமதிப் பத்திர எழுத்துப் பரீட்சைக்கான திகதியுடன் அனுமதிச் சீட்டு வளங்கப்படும்
  • எழுத்துப் பரீட்சையில் சித்தியெய்தியதும் தாங்கள் எந்த வாகனத்தில் சாரதிப் பயிற்சி எடுக்கப் போகின்றீர்களோ அந்தவாகனத்திற்கு எதாவது ஒரு காப்புறுதி நிறுவனத்தில் பயிலுநர் காப்புறுதியினைப் பெற்று அக்காப்புறுதியுடன் உங்கள் புகைப்படத்தினையும் இணைத்து அலுவலகத்தில் ஒப்படைத்ததும் நீங்கள் வாகனம் செலுத்திப் பழகுவதற்கு பயிலுனர் அனுமதிப்பத்திரம் வளங்கப்படும் (இவ் பயிலுனர் அனுமதிப்பத்திரம் பரீட்சை எழுதிய திகதியில் இருந்து 18 மாதங்களிற்கு செல்லுபடியாகும்)
  • நீங்கள் பரீட்சை எழுதிய திகதியிலிருந்து 92 நாட்களின் பின்னர் நேர்முக சாரதி பரீட்சையில் (Trial Exam) பங்குபற்ற முடியும்.
  • நேர்முக சாரதிப் பரீட்சையில் சித்தியடைந்ததும் 12 மாதங்களிற்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தபால் மூலம் உங்களிற்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டை கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: